search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சியில்  புதிய பாலங்கள் கட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு
    X

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு மேற்கொண்ட காட்சி

    செஞ்சியில் புதிய பாலங்கள் கட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு

    • சங்கராபரணி ஆற்றின் அருகே செஞ்சி நகரில் இருந்து மழை நீர் செல்லும் இடத்தில் மழை நீர் தேங்குகிறது.
    • ஒன்றிய அவை தலைவர் வாசு உட்பட பலர் உடன் இருந்தனர்.

    விழுப்புரம்:

    செஞ்சி பகுதியில் புதிய பாலங்கள் கட்டுவது சம்பந்தமாக அதிகா ரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆலோசனை நடத்தினார். செஞ்சி பேருராட்சி 18- வது வார்டில் சக்கராபுரம் - பொன்பத்தி செல்லும் பிரதான சாலையில் பொன்பத்தி ஏரி உபரி நீர் செல்லும் மேம்பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. இதே போல் செஞ்சி சங்கராபரணி ஆற்றின் அருகே செஞ்சி நகரில் இருந்து மழை நீர் செல்லும் இடத்தில் மழை நீர் தேங்குகிறது. இந்த 2 இடங்க ளிலும் புதிய பாலங்கள் கட்டுவது சம்பந்தமாக அதிகாரிகளுடன் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பேரூராட்சிகளின் உதவி செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் செஞ்சி ஒன்றிய குழு தலைவர் விஜயகுமார் பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் செயல் அலுவலர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அஞ்சாஞ்சேரி கணேசன், நகர செயலாளர் கார்த்திக், துணை செயலாளர் செயல்மணி, கவுன்சிலர் மோகன், தொண்டரணி பாஷா, ஒன்றிய அவை தலைவர் வாசு உட்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×