என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரியில் புத்தகத் திருவிழா- அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
- தருமபுரி மாவட்டத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை முதல் வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது. இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தொடங்கி வைக்கிறார்.
- புத்தக கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்ட லட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
தருமபுரி
தருமபுரி வள்ளலார் திடலில் மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் தருமபுரி புத்தகத் திருவிழா 2023- னை வருகின்ற நாளை காலை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,தொடங்கி வைத்து,கண்காட்சி அரங்குகளை பார்வையிடுகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்திட ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் 5-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நாளை முதல் வள்ளலார் திடலில் நடைபெற உள்ளது. தருமபுரி புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளைக் கொண்ட இலட்சக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இப்புத்தக திருவிழாவில் நாள்தோறும் காலை முதல் இரவு வரை புத்தகக் கடைகள் திறந்திருக்கும். நாள்தோறும் மாலை 7 மணியிலிருந்து 8.30 மணி வரை தமிழகத்தின் முன்னணி பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், பல்துறை ஆளுமைகள், அறிவுசார் சான்றோர்கள் ஆகியோரின் சொற்பொழிவு நிகழ்வுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற உள்ளது.
நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இலக்கிய அமைப்புகள் நடத்தும் கலந்துரையாடல்களும், மாணவ. மாணவியர்கள் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. அனைத்து புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்ககூடிய வகையில் நடைபெற உள்ள இம்மாபெரும் புத்தகத் திருவிழாவினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்து சிறப்பிக்க உள்ளார்.
மேலும், இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர். நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், , பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்