என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைத்த சங்கரன்கோவில் மாணவிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
- மாணவி முவித்ரா 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.
- ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேசன், கோகிலா தம்பதியரின் மகள் முவித்ரா. 6 வயது மாணவியான இவர் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் ஸ்கேட்டிங்கில் முந்தைய சாதனையான சங்கரன்கோவிலை சேர்ந்த ஆதவன் என்ற 7 வயது மாணவன் 10 கிலோமீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து படைத்த சாதனையை முறியடிக்கும் வகையில் மாணவி முவித்ரா சங்கரன்கோவில் கழுகுமலை சாலையிலிருந்து அழகனேரி வரை 10 கிலோ மீட்டர் தூரத்தை 27 நிமிடம் 32 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்து யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ல் இடம் பிடித்தார்.
அதனை தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மாணவி முவித்ராவை அழைத்துச் சென்று வாழ்த்து பெற வைத்தார். அப்போது விவேகானந்தா ஸ்கேட்டிங் மற்றும் யோகா பயிற்சி நிலைய நிறுவனர் சுரேஷ்குமார், ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பாக்கியராஜ், முவித்ராவின் தாயார் கோகிலா மற்றும் மாஸ்டர் சாந்தனு, கல்பனா ஆகியோர் உடன் இருந்தனர்.