என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் தரைப்பாலப் பணி தாமதத்தால் வாகன ஓட்டிகள் அவதி: விரைந்து முடிக்க கோரிக்கை
- சாலையின் ஒரு பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு ஒரே மார்க்கத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன.
- தரைப்பாலப்பணி கடந்த சில வாரங்களாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
வண்டலூர்:
வண்டலூர் ஜி.எஸ்.டி. சாலையில் தொடங்கி பழைய மாமல்லபுரம் சாலையான கேளம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் இணையும் 18 கிலோ மீட்டர் கொண்ட வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலைதடுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதைத்தொடர்ந்து 4 வழிப்பாதையான இந்த சாலையில், ரத்தினமங்கலம்-கண்டிகை இடையே தலைப்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்த பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் சாலையின் ஒரு பகுதி முழுவதும் அடைக்கப்பட்டு ஒரே மார்க்கத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில் தரைப்பாலப்பணி கடந்த சில வாரங்களாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தரைப் பாலம் பணி முடிவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
இதன்காரணமாக கடும் புழுதி பறக்கும் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் தவித்து வருகின்ற னர். எனவே தரைப்பாலப் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களும், வாகன ஓட்டி களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.