என் மலர்
உள்ளூர் செய்திகள்
முல்லைப்பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிவு - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
- கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
- தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
கூடலூர்:
கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி வரை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து கடுமையாக சரிந்தது. இன்று காலை 11 கன அடி நீர் மட்டுமே வருகிறது. அணையின் நீர்மட்டம் 117.70 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 300 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.67 அடியாக உள்ளது. 105 கன அடி நீர் வருகிறது. 72 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 55 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 19.68 அடியாக உள்ளது. 42 கன அடி நீர் வருகிறது. 23 கன அடி நீர் திறக்கப்படுகிறது.