search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கு
    X

    தருமபுரி பெரியார் பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான கருத்தரங்கு

    • இயற்பியல் துறை சார்பாக கருத்தரங்கு நடந்தது.
    • தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் கதிரவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.

    தருமபுரி,

    தருமபுரியை அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

    இதன் தொடக்க விழாவில் பெரியார் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் கதிரவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடக்க உரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் கொச்சின் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ராஜப்பன், சென்னை செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக புலமையர் பேராசிரியர் குணசேகரன், தெலுங்கானா மாநில வாரங்கல், கக்காட்டியா பல்கலைக்கழக பேராசிரியர் ரமணா ராவ், பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர் செல்வ பாண்டியன், பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சி மைய இயக்குனர் மோகனசுந்தரம் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து சென்னை ஐ.எஸ்.பி.ஏ. அறிவியல் கழகத்தின் சார்பாக ஆந்திர பிரதேச செஞ்சூரியன் பல்கலைக்கழக பேராசிரியர் சாந்தம்மாவுக்கு சிறந்த பெண் விஞ்ஞானி விருதும், கொச்சின் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜப்பனுக்கு சிறந்த விஞ்ஞானி விருதும், கோவை என்.ஜி.பி கல்லூரி முதல்வர் ராஜேந்திரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பிரசாத்துக்கு டாக்டர் குணசேகரன் விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் துறை தலைவருமான பேராசிரியர் செல்வ பாண்டியன் வரவேற்புரை வழங்கினார். இறுதியாக இக்கருத்தரங்கின் துணைத் தலைவர் முனைவர் பிரசாத் நன்றி உரை வழங்கினார்.

    Next Story
    ×