search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே  நுழைவு வாயில் கதவு இல்லாமல் இயங்கும் தொடக்கப்பள்ளி
    X

    தொடக்கப்பள்ளியின் நுழைவு வாயில் கதவு இல்லாமல் இருப்பதை படத்தில் காணலாம்.

    சின்னசேலம் அருகே நுழைவு வாயில் கதவு இல்லாமல் இயங்கும் தொடக்கப்பள்ளி

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கும் தொடக்கப்பள்ளி உள்ளது.
    • நுழைவுவாயில் கதவு இல்லாததால் மிக எளிமையாக குழந்தைகள் சாலைக்கு வெளியே வரமுடியும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் கிராமத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இயங்கும் தொடக்கப்பள்ளி உள்ளது இதில் 5 வயது முதல் 9வயது வரை உள்ள குழந்தைகள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் படித்துக் கொண்டு வருகிறார்கள்.

    இந்த தொடக்கப் பள்ளியில் முன் பகுதியில் உள்ள காம்பவுண்ட் நுழை வாயில் கேட் இல்லாததால் குழந்தைகளுக்கு பாது காப்புஇல்லாமல் இருக்கிறது. நுழைவாயில் கதவு இல்லாததால் மிக எளிமையாக குழந்தைகள் சாலைக்கு வெளியே வரமுடியும். அப்பொழுது அவ்வழியில் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட அதிக அளவில் வாய்ப்புள்ளது. வருமுன் காப்போம் என்ற வாசக த்துக்குஏற்றவாறு குழந்தைகளுக்கு விப த்து ஏற்படுவதற்கு முன்னதா கவே நுழை வுவாயிலில் பாதுகா ப்பான கேட் வைக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குழந்தை களின் பெற்றோர் கோரி க்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×