என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரக்காணம் அருகே கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம்
- அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்
- கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
விழுப்புரம் :
மரக்காணம் அருகே நகர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் தெரு உள்ளது. இதில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் விவசாய குடும்பத்தினை சேர்ந்தவர்கள். இந்த தெருவில் சாக்கடை கழிவு நீர் குடிநீருடன் கலந்து தெருவில் ஓடுவதாலும், அப்பகுதியில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தெருவில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரும், சாக்கடை நீரும் பல நாட்களாக தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசு உற்பத்தியாகிறது. இதனால் மர்ம நோய்களும், மலேரியா, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்து உடனடியாக அந்த மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.