search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பகண்டை கூட்டு ரோடு அருகே  வெளிநாட்டுக்கு அனுப்ப மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை
    X

    பகண்டை கூட்டு ரோடு அருகே வெளிநாட்டுக்கு அனுப்ப மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை

    • வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார்.
    • செந்தில் உடல் திடீரென பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    பகண்டை கூட்டு ரோடு அருகேகாரனூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்(வயது35). இவரது மனைவி அருள்மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். செந்தில் குடும்பத்தினருடன் பகண்டை கூட்டுரோடு அடுத்த அரியலூர் கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் அவரது உடல் திடீரென பாதிக்கப்பட்டது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் மீண்டும் வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக செந்தில் தனது மனைவி அருள்மணியிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அருள்மணி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த செந்தில் வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் பகண்டைகூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×