என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலக்கோடு அருகே மணல் கடத்திய 5 டிராக்டர் உள்பட 6 வாகனங்கள் பறிமுதல்
- மணல் கடத்திய வாகனங்களை சிறைபிடித்து பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
- வருவாய்துறை , வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீங்காடு கிராம பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த மழை பொழிவால் கிராமத்தை ஒட்டி உள்ள காப்புக்காடு வனப் பகுதிகளில் வழிந்தோடும் நீரோடை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி நேற்று 5 டிராக்டர், ஜேசிபி எந்திரம் மூலமாக மணல் கடத்திய நிலையில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து மணல் கடத்திய வாகனங்களை சிறைபிடித்து பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறை, வருவாய்த்து றை துறை, வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பாலக்கோடு வட்டாட்சியர், காவல்துறை அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜேசிபியை பறிமுதல் செய்தனர்.