search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணைநல்லூர் அருகே  அதிகாரிகளை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி பொது மக்கள் போராட்டம்
    X

    திருவெண்ணைநல்லூர் அருகே அதிகாரிகளை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி பொது மக்கள் போராட்டம்

    • சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
    • மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அனிதா, ஊராட்சி செயலர் மூவேந்தன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலா மற்றும் அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் கிராமத்திற்குத் தேவையான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

    அப்போது கிராம பொதுமக்கள் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். கட்சி பிரமுகர் ஒருவரின் தூண்டுதல் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் அதிகாரியிடம் பேசியதால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்படாமல் உள்ளது எனக்கூறி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்தனர். திருவெண்ணைநல்லூர் போலீசார் சமாதானம் செய்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன், உதவி செயற்பொறியாளர் நித்யாமற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அதே இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். சுதந்திர தின விழா கிராமசபை கூட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×