search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தியாகதுருகம் அருகே தேசிய பேரிடர் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
    X

    நாகலூர் அரசுப்பள்ளியில் பேரிடர் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    தியாகதுருகம் அருகே தேசிய பேரிடர் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

    • தியாகதுருகம் அருகே தேசிய பேரிடர் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் பாலு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தேசிய பேரிடர்மீட்பு படை உதவி ஆய்வாளர் சஞ்சீவதேஸ்வால் தலைமை யில் நிலநடுக்கம் ஏற்படும் போதும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மற்றும் பாது காப்பு குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் 15-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், ரூபா தேவி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×