search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    30 ஆண்டுகளுக்கு பிறகு திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவிலில் புதிய வெண்கல மணி
    X

    30 ஆண்டுகளுக்கு பிறகு திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவிலில் புதிய வெண்கல மணி

    • பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குகிறது.
    • வெண்கல மணி 113 சென்டி மீட்டர் உயரமும், 287 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவலில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேசுவரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக இக்கோவில் விளங்குகிறது.

    இக்கோவில் சாமி சன்னதி வாயிலில் மணி மண்டபம் உள்ளது. ஆனால் அந்த மணிமண்டபத்தில் இருந்த மணி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 30 ஆண்டுகளாக இக்கோவிலில் மணியோசை கேட்காத நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் உபயதாரர்கள் மூலம் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய வெண்கல மணி இக்கோவிலுக்காக புதிதாக செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதியில் சீனிவாசன் ஸ்தபதி மூலம் செய்யப்பட்டுள்ள இந்த வெண்கல மணி 520 கிலோ எடை கொண்டது.

    அழகிய வடிவ மைப்புடன் செய்யப்பட்டு உள்ள இந்த வெண்கல மணி 113 சென்டி மீட்டர் உயரமும், 287 சென்டிமீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது.

    நேற்று இரவு மாணிக்க வாசகரின் திரு நட்சத்திரத்தை முன்னிட்டு நடைபெறும் மாணிக்க வாசகரின் புறப்பாட்டு ஊர்வலத்துடன் மங்கள வாத்தியங்கள் முழங்க இந்த வெண்கல மணி எடுத்து வரப்பட்டது. இன்று புதன் கிழமை இந்த வெண்கல மணி பொருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    வருகிற 12-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் உச்சிகால பூஜையின் போது புதியதாக பொருத்தப்பட்ட வெண்கல மணியோசை கோவில் முழுவதும் ஒலிக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×