என் மலர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் புதிய 'எஸ்கலேட்டர்' திறப்பு
- பணி மந்த கதியில் நடந்து வந்ததால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
- எஸ்கலேட்டர் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருப்பூர் :
திருப்பூரின் தொழில் வளர்ச்சியில் ரெயில் நிலையத்தின் பங்கும் முக்கியமாக உள்ளது. ஆனால் மாநகரின் வளர்ச்சிக்கு தகுந்த அளவில் ரெயில் நிலையம் மேம்படுத்தப்படவில்லை என்பது திருப்பூர் மக்களின் நீண்ட கால ஆதங்கமாக உள்ளது. இந்த நிலையில் சமீப காலமாக ரெயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வரு–கிறது. முதல் நடைமேடையில் உள்ள பழைய நடைமேம்பாலத்தில் ஏறுவதற்கு வசதியாக 'லிப்ட்' அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இந்த நடைமேடையின் மற்றொரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நடைமேம்பாலத்திற்கு செல்வதற்கு எஸ்கலேட்டர்(நகரும் படிக்கட்டு) அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணி மந்த கதியில் நடந்து வந்ததால் பயணிகள் அதிருப்தியடைந்தனர்.
இந்தநிலையில் எஸ்கலேட்டருக்கான பணிகள் நிறைவடைந்ததையடுத்து கடந்த சில தினங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு தற்போது பணிகளின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதில் பயணிகளின் கருததுகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. எஸ்கலேட்டர் திறக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கான வழிகாட்டி பலகை அமைத்தல், நடைபாதை அழகபடுத்ததல் உள்ளிட்ட பணிகளையும் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்த எஸ்கலேட்டரானது மேம்பாலத்திற்கு ஏறும் வகையில் அமைககப்பட்டுள்ளதால் பயணிகள் இறங்குவதற்கு வசதியாக இதன் அருகிலேயே 'லிப்ட்' அமைக்கும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இதுவும் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.