search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் மரூர்புதூர் செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
    X

    மரூர்புதூர் கிராமத்தில் செல்வ முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்ற போது எடுத்த படம்.

    சங்கராபுரம் மரூர்புதூர் செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

    • சங்கராபுரம் மரூர்புதூர் செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    கள்ளகுறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா மரூர் புதூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள செல்வ முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், தனபூஜை, கோ பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி, ரக்ஷாபந்தனம், பின் முதற்கால யாக பூஜை, விசேஷ திவ்யஹோமம், அதைத்தொடர்ந்து இரவு பூர்ணாஹீதி தீபாராதனை நடைபெற்றது. பின் இன்று காலை 6 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, தத்வார்ச்சனை, ஸாபர்சாஹீதி, காலை 9 மணிக்கு மஹா பூர்ணா ஹீதி, மஹா தீபராதனை நடந்தது.

    காலை 9.30 மணிக்கு கோபுர மஹா கும்பாபிஷேகம், 9.45 மணிக்கு மூலஸ்தான மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று இரவு புஷ்ப அலங்காரத்தில் வான வேடிக்கையுடன் மேளதாளம் முழங்க செல்வ முத்து மாரியம்மன் சாமி வீதியுலா நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×