search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னாறு அணையின்  கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும்   -முதல்-அமைச்சரிடம் தருமபுரி எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
    X

    வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ.

    சின்னாறு அணையின் கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்த வேண்டும் -முதல்-அமைச்சரிடம் தருமபுரி எம்.எல்.ஏ. கோரிக்கை மனு

    • கன மழையால் அணை நிரம்பி உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.
    • பாசன கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த தங்களை கேட்டுக்கொள்கின்றேன்.

    தருமபுரி,

    சென்னையில் நடை பெற்ற சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பின்னர், முதல்-

    அ மைச்சரிடம் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்க டேஷ்வரன் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், சின்னாறு (பஞ்சப்பள்ளி) அணைக்கு பெய்து வரும் கன மழையால் அணை நிரம்பி உபரிநீர் முழுமையாக வெளியேற்றப்பட்டது.

    உபரிநீரின் ஒரு பகுதி மாரண்டஅள்ளி அணைக்கட்டு, செங்கன்பசுவன்தலாவ் ஏரி, ஜெர்த்தலாவ் ஏரி, புங்கன்குட்டை, தளவாய்அள்ளி ஏரி, முத்தூர் ஏரி, ஏ.செட்டிஅள்ளி ஏரி, சீங்கல் ஏரி, கம்மாளப்பட்டி ஏரி, கொல்லப்பட்டிகுட்டை, பனங்கள்ளி ஏரி, சோகத்தூர் ஏரி, கடகத்தூர் ஏரி மற்றும் பாப்பாரப்பட்டி வழியாக பாப்பாரப்பட்டி ஏரி – பாலவாடி ஏரி – இண்டூர் வரையுள்ள 10-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு வந்து கொண்டிருக்கிறது. மற்றொரு பகுதி சின்னாற்றின் வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கலந்து மேட்டூரை அடைந்து பின்னர் கடலில் கலக்கிறது.

    பாசன கால்வாய்கள் அகலப்படுத்தப்பட்டு முறையாக பரா மரிக்கப்பட்டால் ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகளை அணையின் உபரிநீர் மூலம் விரைந்து நிரப்பி யிருக்க முடியும். மேலும் குறைந்த நாட்களில் அதிக எண்ணிக்கை யிலான நீர்நிலை களையும் நிறைந்திருக்க முடி யும். அணையில் இருந்து கடைமடை பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் வந்து சேரும்போது நீர்வரத்தின் வேகம் சுருங்கி விடுகிறது. கடைமடைக்கு விநாடிக்கு 400 கனஅடிக்கு குறையாமல் நீர்வரத்து இருக்கும் வகையில் பாசன கால்வாய்களை அகலப்படுத்த வேண்டும்.

    தற்போது கால்வாய் போதிய அகலம் இல்லாததால் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக சின்னாறு அணையில் இருந்து சின்னாற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் பெரும் பகுதி கடலுக்குத்தான் செல்கிறது.

    நிலத்தடி நீர்மட்ட அளவை உயர்த்தவும், விவசாய நிலப்பரப்பை பெருக்கி விவசாயம் செழிக்கவும், வேலைவாய்ப்பு பெருக்கவும், வெளி மாநில, மாவட்டங்களுக்கு வேலைவாய்ப்பு தேடி சென்றுள்ளவர்கள் சொந்த ஊர் திரும்பி மகிழ்ச்சியாக வாழவும் மேற்கண்ட பாசன கால்வாய்களை தூர்வாரி அகலப்படுத்தும் பணியை விரைந்து செயல்படுத்த தங்களை கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×