என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பாலக்கோடு பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்ட பணிகளை அதிகாரி திடீர் ஆய்வு
- திட்டப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணி களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் பேருந்து நிலைய சீரமைப்பு பணிகள், வளமீட்பு பூங்காவில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல்சத்தி திட்டத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருவது குறித்து சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேரூராட்சி நிர்வாகம் கூசுகல் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுத்தி வருவதாக பாராட்டு தெரிவித்தார்.
மேலும் பாலக்கோடு பேருந்து நிலைய சீரமைப்பு பணி களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது தருமபுரி மண்டல உதவி இயக்குனர் குருராஜன், மண்டல செயற்பொறியாளர்கள், மாவட்ட உதவி செயற்பொறியாளர்கள், பேரூராட்சி தலைவர் முரளி, செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு மேற்பார்வையாளர் ரவீந்திரன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உடன் இருந்தனர்.