search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கட்டிட மேஸ்திரி உள்பட 3 பேர் மீது  வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குபதிவு
    X

    கட்டிட மேஸ்திரி உள்பட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குபதிவு

    • விஜயகுமாருக்கும், எட்டிகுழி பகுதி யை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
    • அந்த பெண்ணை விஜயகுமார் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அடுத்துள்ள எட்டிகுழி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். கட்டிட மேஸ்திரியான இவரும், ஆயாமரத்துப்பட்டியை சேர்ந்த காமாட்சி என்கிற ரேவதி என்பரும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வெறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் இருவரை வீட்டை விட்டு வெளியேறி பழனியில் திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் விஜயகு மாருக்கும், எட்டிகுழி பகுதி யை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த பெண்ணை விஜயகுமார் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார்.

    இந்த சம்பவம் பெண்ணின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் விஜயகுமார், கோவி ந்தராஜ், கயலநாதன் மற்றும் எதிர்தரப்பினர் மாயமான இளம் பெண்ணின் உறவினர்களும் மோதி கொண்டு தாக்கியுள்ளனர்.

    இது தொடர்பாக பெரும்பாலை போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கட்டிட மேஸ்திரி கோவிந்தராஜ், விஜயகுமார், கயலநாதன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர்.

    Next Story
    ×