search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெருமாநல்லூர் சாலையில்  நவீன கேமராக்கள்
    X

    பெருமாநல்லூர் சாலையில் நவீன கேமராக்கள்

    • ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் பதிவு செய்யும் இரண்டு கேமராக்கள் மற்றும் 4 துணை கேமராக்கள் அடங்கும்.
    • ஈரோடு மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் முதலில் பொருத்தப்பட்டுள்ளது இந்த அதிநவீன கேமராக்கள்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் குன்னத்தூர் இணைக்கும் மேம்பாலம் உள்ளது. இது கோவையில் இருந்து ஈரோடு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    தற்போது திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அவிநாசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் பதிவு செய்யும் இரண்டு கேமராக்கள் மற்றும் 4 துணை கேமராக்கள் அடங்கும்.

    இது குற்ற தடுப்பை கண்காணிக்கவும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்லும் வாகனங்களின் எண்களைபதிவு செய்ய உதவும் தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள் ஆகும். திருப்பூர் ,கோவை, ஈரோடு மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் இங்கு தான் முதல் முதலில் பொருத்தப்பட்டுள்ளது இந்த அதிநவீன கேமராக்கள்.

    இதன் மூலம் திருப்பூர் ,கோவை ,ஈரோடு மாவட்டத்தில் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் வாகனத்தில் தப்பி செல்லும் போது வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு குற்றவாளிகளை எளிதில் பிடித்து விடலாம் என்று பெருமாநல்லூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகன் தெரிவித்தார்.

    Next Story
    ×