search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாப்பாரப்பட்டி- நாகதாசம்பட்டி செல்லும் சாலையில்  எச்சரிக்கை பலகை வைக்காமல் சாலை விரிவாக்கம் செய்வதால் தொடரும் விபத்துகள்
    X

    முன் அறிவிப்பின்றி நடக்கும் சாலை விரிவாக்க பணி.

    பாப்பாரப்பட்டி- நாகதாசம்பட்டி செல்லும் சாலையில் எச்சரிக்கை பலகை வைக்காமல் சாலை விரிவாக்கம் செய்வதால் தொடரும் விபத்துகள்

    • இது வரை 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.
    • இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட பாப்பாரப்பட்டியில் இருந்து நாகதாசம்பட்டி வழியாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு, ஒசூர்,கர்நாடகா மாநிலத்திலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.

    இந்த சாலையை கிராம மக்கள் மற்றும் சுற்றுலா பயணிள் அதிகளவில் பயன்படுத்துவதால், நெ டுஞ்சாலைதுறையினர் கடந்த 6 மாதங்களாக விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு அதன் முன் எந்த ஒரு எச்சரிக்கை பலகைகளும் வைக்கவில்லை.

    அதே போல் சாலை விரிவாக்கம் பணி நடைபெறுகிறது என எச்சரிக்கை பலகைகள் வைக்காததால், இரவு மற்றும் பகல் நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து செல்கின்றனர்.

    இது வரை 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளது.

    இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்த குடும்பத்திற்கும் மற்றும் காயமடைந்த குடும்பத்திற்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், மேலும் சாலை விரிவாக்கம் செய்யும் இடங்களில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும், பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×