என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வானூர் அருகே ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டில் தீ விபத்து: ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
- ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது.
- முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே தலக்காணிக்குப்பம் கிராமம் உள்ளது. இந்த ஊராட்சிக்கு மகாலட்சுமி தேவேந்திரன் தலைவராக உள்ளார். இவர் அக்கிராமத்திலேயே உள்ள, அவருக்கு சொந்தமான தளம் ஒட்டிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீப்பிடித்து எரிந்தது. இத்தகவல் அறிந்த வானூர் தீயணைப்பு அலுவலர் முகுந்தன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி தேவேந்திரன் வீட்டில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர், லேப்டாப், எல்.இ.டி. டிவி, இன்வெர்ட்டர் மற்றும் மின் சாதன பொருட்கள் எரிந்து நாசமாயின. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அலவலர் தெரிவித்தார். இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.