search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெண்டர் பிரச்சினையில் மோதல் பெரியகுளம் யூனியன் தலைவரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் ராஜினாமா செய்ய முடிவு
    X

    கோப்பு படம்

    டெண்டர் பிரச்சினையில் மோதல் பெரியகுளம் யூனியன் தலைவரை கண்டித்து ஊராட்சி தலைவர்கள் ராஜினாமா செய்ய முடிவு

    • ஊராட்சி தலைவர்கள் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • டெண்டர் பிரச்சினையால் ஊராட்சி தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்வது என்று முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றிய ஊராட்சி தலைவர் கூட்டமைப்பு செயலாளர் ஜெயராம், பொருளாளர் பால்ராஜ் உள்பட ஊராட்சி தலைவர்கள் யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெக தீசனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் தங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளும்போது தங்களுக்கு தெரியாமலேயே டெண்டர் கோரப்படுவதாக ஊராட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

    அதற்கு பதில் அளித்த அதிகாரிகள் ஊராட்சிகள் யூனியனுக்கு கட்டுப்பட்டது என்பதால் தமிழகம் முழு வதும் இேத நடை முறைதான் கடைபிடிக்க ப்படுகிறது என தெரி வித்தனர்.

    இதனால் அதிருப்தி அடைந்த ஊராட்சி தலைவர்கள் அங்கிருந்து வெளி யேறினர். கூட்ட மைப்பின் பொருளாளர் பால்ராஜ் இது குறித்து தெரிவிக்கையில், தமிழகம் முழுவதும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் ஊராட்சி, கிரா மசபை கூட்ட முடிவின்படி தேர்வு செய்து டெண்டர் நடைமுறைப்படுத்த அரசு ஆணை உள்ளது.

    அந்த அடிப்படையில் ஊராட்சி தலைவர்களின் ஆலோச னையில் டெண்டர்கள் நடவடிக்கையின்றி ஒன்றிய தலைவர், வட்டார வளர்ச்சி அதிகாரி மற்றும் குறிப்பிட்ட நபர்களுக்கு தன்னிச்சையாக டெண்டர் விட பணிகள் நடப்பதை அறிந்தோம். இதற்கு ஊராட்சி தலைவர்கள் சார்பில் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தோம்.

    ஒளிவு மறைவற்ற டெண்டர் நடத்த கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதனை அவர்கள் ஏற்கவில்லை. எனவே ஊராட்சி தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்வது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.

    Next Story
    ×