search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவெண்ணெய்நல்லூரில்   பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்
    X

    கடைக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் காட்சி.

    திருவெண்ணெய்நல்லூரில் பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

    • திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் ஆய்வு செய்ததில் 5 பேர்களிடம் இருந்து தலா 100 முதல் 500 ரூபாய் வசூலிக்க பட்டது.
    • சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன் , சுப்பிரமணியன், கோட்டையன் , பிரகாஷ், அருண்குமார், தினகரன் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணெய்நல்லூர் கடைவீதிகளில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி சுகாதார துணை இயக்குனர் ஆணைப்படி திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம் இருவேல்பட்டு அரசு மருத்துவமனை மூலம் நேற்று பொதுஇடங்களில் புகைப்பிடிக்கும் நபர்கள் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பதாகைகள் உள்ளனவா என்பது குறித்து மாவட்ட புகையிலை தடுப்பு ஆலோசகர் மருத்துவர் சுனிதா, திருவெண்ணெய்நல்லூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

    மேலும் திருவெண்ணெ ய்நல்லூர் பகுதியில் ஆய்வு செய்ததில் 5 பேர்களிடம் இருந்து தலா 100 முதல் 500 ரூபாய் வசூலிக்க பட்டது. இம்முகாமில் சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன் , சுப்பிரமணியன், கோட்டையன் , பிரகாஷ், அருண்குமார், தினகரன் கலந்து கொண்டனர். இதேபோல் மடப்பட்டு கடை வீதிகளில் திருநாவலூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் செல்வி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பெருமாள் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முருகன், குமார், கோபி ஆகியோர் பொது இடங்களிலும், கடைகளில் புகையிலை விற்றல், புகைப்பிடித்த நபர்களிடம் இருந்து 1500 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.

    Next Story
    ×