என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனித கழிவை கால்வாயில் திறந்து விட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி
- ஆலையில் தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள சுற்றுச் சுவரை ஒட்டி பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் செல்கிறது,
- நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழும் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது,
பாப்பிரெட்டிப்பட்டி.
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி பொம்மிடி-தருமபுரி மெயின் ரோட்டில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலை சுமார் 40 ஏக்கர் பரப்பில் மாநில அளவில் மிகப்பெரிய ஆலையாக செயல்பட்டு வருகிறது.
இந்த ஆலை ஒரு லட்சத்து 9,715 சதுர அடி பரப்பிலும், நிரந்தர பணியாளர்கள் 89 பேரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 800-க்கு மேற்பட்டவர்களும் வேலை செய்து வருகின்றனர். அதிநவீன இயந்திரங்களை கொண்டு இயக்கப்படுகின்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட வட இந்திய தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்
இந்த ஆலையில் தருமபுரி மெயின் ரோட்டில் உள்ள சுற்றுச் சுவரை ஒட்டி பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் செல்கிறது, இந்த கால்வாயில் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் மனிதக் கழிவுகளை கழிவு நீர் தொட்டியில் சேகரிக்காமல் நேரடியாக திறந்து விடப்படுவதால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் உடல் நலம் பாதிக்கப்படுவதோடு, கடும் துர்நாற்றம் வீசுவதாக குற்றம் சாட்டுகின்றனர்
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்:-
இந்த ஆலையில் வேலை செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு உள்ளே தங்கி வேலை செய்வதற்கான குடியிருப்புகளோ, அடிப்படை வசதிகளோ செய்து தரப்படுவதில்லை. குறிப்பாக கழிப்பிட வசதிக்கு கழிப்பிடங்கள் பெருமளவு கட்டிக் கொடுக்கப்படவில்லை.
இவர்கள் சில கழிப்பிடங்கள் சுற்றுச்சூழலை ஒட்டி பேரூராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் கால்வாயை ஒட்டி தற்காலிகமாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதால் நேரடியாக மனித கழிவுகள் கால்வாயில் கலந்து தண்ணீருடன் ஊருக்குள் செல்கின்றது.
இந்த கழிவுகள் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் மிதந்து செல்கிறது. இதனால் இந்த நெடுஞ்சாலையை ஒட்டி வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழும் வீடுகளில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது, சுவாச பிரச்சனையும் குமட்டல், வாந்தி போன்ற தொல்லைகளால் இப்பகுதி மக்களுக்கு தினமும் ஏற்பட்டு வருகிறது.
எனவே பேரூராட்சி நிர்வாகமும், மாவட்டம் மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகம், மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆலைக்கு சென்று ஆய்வு செய்து ஆலையில் உள்ள தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் குறித்தும் கழிப்பிடங்கள் வசதிகள் இருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்:-
ஆலை நிர்வாகம் மனிதாபிமானமற்ற, அருவருக்கத்தக்க வகையில் மனிதக் கழிவுகளை நேரடியாக பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள கழிவுநீர் கால்வாயில் திறந்து விட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கதக்க செயல். உடனே மாவட்ட நிர்வாகம் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்