search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புளியங்குடியில் மின்தடை அறிவிப்பில் குளறுபடியால் மக்கள் அவதி
    X

    புளியங்குடியில் மின்தடை அறிவிப்பில் குளறுபடியால் மக்கள் அவதி

    • மின் தடை அறிவிப்பால் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
    • மின்தடை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை.

    புளியங்குடி:

    புளியங்குடி பகுதியில் நேற்று (2-ந்தேதி) மின்வினியோகம் ரத்து செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை நம்பி தொழிற் கூடங்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் என அனைத்து தரப்பினரும் மின்தடைக்கு ஏற்ப தங்களது பணிகளை மாற்றி அமைத்துக் கொண்டனர். மேலும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் நேற்று புளியங்குடி பகுதியில் மின் தடை செய்யப்படவில்லை. இதனால் தொழிலாளிகளுக்கு விடுமுறை அளித்திருந்த தொழிற் கூடங்கள், தங்களது பணிகளை மாற்றி அமைத்திருந்த தொழிலாளிகள், விவசாய நிலத்தில் நீர் பாசனத்தை மாற்றி அமைத்து இருந்த விவசாயிகள் மற்றும் இல்லத்தரசிகள் கடும் குழப்பத்திற்கு ஆளா னார்கள். மின்தடை குறித்து அறிவிப்பு வெளியிட்ட மின்வாரியம், அதனை ரத்து செய்த விபரத்தை முறையாக பொது மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் ஒரு சில தொழிற்கூடங்களுக்கும் தொழிலாளிகளுக்கு மட்டும் மின் தடை இல்லை என்ற தகவலை தெரியப்படுத்தி மின்வாரிய ஊழியர்கள் பாரபட்சம் காட்டியுள்ளதாக பெரும்பாலானோர் புகார் கூறினர்.

    இதேபோல் இதற்கு முன்பும் மின்வாரியத்தின் மின்தடை அறிவிப்பில் குளறுபடி நடந்துள்ளது. மின்தடை அறிவிப்பு வெளியிடுவதும், பின்னர்

    ரத்து செய்வதும் புளிய ங்குடி பகுதியில் வாடி க்கையான ஒன்றாகி விட்டது. எனவே இனிவரும் நாட்களில் மின்தடை குறித்து அறிவிக்கும் முன்னரே, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள் மற்றும் நிர்வாக காரணங்களை ஆராய்ந்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×