search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை
    X

    வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை

    • வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
    • பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக கூறி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மதர்சா சாலையை சேர்ந்தவர் கமால்பாட்ஷா. இவர் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சல்மான் (வயது30). பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் லைபரிக்கு வரும் போது சல்மானுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இருவரும் காதலித்துள்ளனர்.

    திருமணம் செய்து கொள்வதாய் ஆசை வார்த்தை கூறிய சல்மான் அந்த இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு நான் கூப்பிடும் போதெல்லாமல் வர வேண்டும். இல்லை யென்றால் வீடியோவை சமூக வளைதளத்தில் பதிவிடுவேன் என கூறி மிரட்டி அந்த இள ம்பெண்ணிடம் பலமுறை உல்லாசமாக சல்மான் இருந்துள்ளார்.

    இதனால் அந்த இளம்பெண் கர்ப்பம டைந்தார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். ஆனால் சல்மான் உன்னை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை நடத்தமுடியாது என கூறிவிட்டார்.

    இந்நிலையில் 2014-ம் ஆண்டு அந்த இளம்பெண் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரி ன்பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து இளம்பெண்ணை திருமணம் செய்வதாய் கூறி உல்லாசமாக இருந்து விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞர் சல்மானை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சல்மான் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இந்த வழக்கு பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சுந்தரராஜன் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரவேல் இளம்பெண்ணிடம் திரு மணம் செய்துகொள்வதாய் ஆசை வார்த்தைக் கூறி பழகி, கற்பழித்து ஏமாற்றிய சல்மானுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும், அபராத தொகை கட்டத்தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

    அபராத தொகையில் ரூ.1.75 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து சல்மான் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×