search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6,546 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.28.76 கோடி கடனுதவி-அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்
    X

    6,546 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.28.76 கோடி கடனுதவி-அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்

    • 6,546 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.28.76 கோடி கடனுதவி வழங்கப்பட்டது
    • மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கி, சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கடனுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. பிரபாகரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு 532 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 6 ஆயிரத்து 546 மகளிர்களுக்கு ரூ.28.76 கோடி கடனுதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது,மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை அதிகளவில் உருவாக்கி, சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைவதற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களை கொண்ட குழுக்களும் அமைக்கப்பட்டு வருகிறது.பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 121 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளில் 3 ஆயிரத்து 906 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புற பகுதிகளில் 13 பகுதி அளவிலான கூட்டமைப்புகளில் 654 மகளிர் சுய உதவிக்குழுக்களும் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் 5 ஆயிரத்து 908 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.264.29 கோடி வங்கி நேரடி கடனுதவி வழங்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் இதுவரை 3 ஆயிரத்து 373 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.140.77 கோடி வங்கி நேரடிக்கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 532 மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த 6 ஆயிரத்து 546 மகளிர்களுக்கு ரூ.28.76 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் டி.ஆர்.ஒ. அங்கையற்கண்ணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, மகளிர் திட்ட இயக்குநர் கருப்பசாமி, நகராட்சி தலைவர் அம்பிகா, துணை தலைவர் ஹரிபாஸ்கர், ஒன்றியகுழு தலைவர் மீனாம்பாள், மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.





    Next Story
    ×