search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ரோவர் கல்வி குழுமத்தில் அகாடமி தொடக்க விழா
    X

    ரோவர் கல்வி குழுமத்தில் அகாடமி தொடக்க விழா

    • ரோவர் கல்வி குழுமத்தில் அகாடமி தொடக்க விழா நடைபெற்றது
    • பெரம்பலூர் மாவட்டத்தில் நீட் பயிற்சிக்கு

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் தந்தை ரோவர் கல்விக்குழுமம் சார்பில் ரோவர் அகாடமி தொடக்க விழா நடந்தது.

    பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள ரோவர் அகாடமி தொடக்க விழாவிற்கு ரோவர் கல்விநிறுவன துணை தலைவர் ஜான்அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் மகாலெட்சுமி, அகாடமி இயக்குநனர் ரமேஷ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

    ரோவர் கல்விநிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்து சேர்க்கையை தொடங்கிவைத்து பேசுகையில், இன்றைய சூழலில் உயர்கல்வி பயில்வதும், வேலைவாய்ப்புபெறுவதும் பெரும் சவாலாகவும், போட்டியாகவும் உள்ளது. தந்தை ரோவர் கல்விக்குழுமத்தின் சார்பாக ரோவர் அக்காடமி தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் முதல்கட்டமாக நீட், ஜேஇஇ தேர்விற்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு ஏழை,எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களும் சேர்ந்து பயன்பெறும் வகையில் மிக குறைந்த கட்டணத்தில் மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவ, மாணவிகள் இருபாலருக்கும் தனித்தனி விடுதி வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    விழாவில் பள்ளி முதல்வர் சந்திரசேகர், தலைமை அலுவலக மேலாளர் ஆனந்தன், மேலாளர் ஜெயசீலன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் சக்தீஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×