search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் மனு
    X

    திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் மனு

    • திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் மனு அளித்தனர்
    • 31-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிநீக்கப்பட்டோர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

    திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபிரிந்து வந்த 28 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்தும், பணிநீக்கம் செய்த ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த கோரியும் அந்த ஊழியர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்களும் கடந்த 1-ந் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    31-வது நாளாக தொடர்ந்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வரகூர் அருணாசலம் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    பின்னர் அ.தி.மு.க. சார்பில் பெரம்பலூர் எஸ்பி அலுவலகம் வந்து எஸ்பி மணியிடம் கோரிக்கை மனு அளித்தனர், அம்மனுவில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும், பணியில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தி அவர்களின் பொருளாதாரத்தை நல்ல முறையில் அமைத்துத் தர காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்பிக்கள் மருதராஜா, சந்திரகாசி, முன்னாள் எம்எல்ஏ பூவைசெழியன், மாவட்ட நிர்வாகிகள் குணசீலன், ராஜாராம், ராஜேஸ்வரி, நகரசெயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் கர்ணன், செல்வகுமார்,சி வப்பிரகாசம், செல்வமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×