என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தூங்கிய பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி தூங்கிய பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி](https://media.maalaimalar.com/h-upload/2023/03/27/1856042-chainsnaching-1.webp)
X
தூங்கிய பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
By
மாலை மலர்27 March 2023 1:42 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெண் கூச்சலிட்டதால் திருடன் தப்பி ஓட்டம்
- பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
பெரம்பலூர்
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நேற்று அதிகாலை அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர், அந்த பெண்ணிடம் தங்க சங்கலியை பறிக்க முயன்றார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண் சுதாரித்து கொண்டு திருடன்... திருடன்... என்று கூச்சலிட்டார். இதையடுத்து அந்த மர்மநபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி, அந்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
X