என் மலர்
உள்ளூர் செய்திகள்

இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி
- இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதி வழங்கப்பட்டது
- புதுவேட்டக்குடி ஊராட்சியில் விபத்து
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் புதுவேட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மனைவி சகுந்தலா (வயது 38). இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் 10-ந்தேதி அரியலூரில் இருந்து பொய்யாத நல்லூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி சகுந்தலா சாலையில் விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்த சகுந்தலாவை அரியலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சகுந்தலா கடந்த ஜூலை 1-ந்தேதி இறந்தார். சகுந்தலா துங்கபுரம் ஐ.ஓ.பி. வங்கியில் பாரதப் பிரதமரின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து இருந்தார்.
இதையடுத்து துங்கபுரம் ஐ.ஓ.பி. கிளை மேலாளர் தினேஷ்குமார் ரூ.2 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு தொகையை சகுந்தலாவின் கணவர் பாலசுப்பிரமணியனிடம் வழங்கினார். அப்போது புது வேட்டக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்வி தர்மலிங்கம் உடன் இருந்தார்.






