என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாவட்டம் என்ற சூழலை உருவாக்குவேன்-பெரம்பலூர் புதிய எஸ்.பி. சியாமளாதேவி உறுதி
- பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாவட்டம் என்ற சூழலை உருவாக்குவேன் என பெரம்பலூர் புதிய எஸ்.பி. சியாமளாதேவி உறுதி அளித்துள்ளார்
- பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பரண்டாக பணியில் இருந்த மணி, சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சென்னையில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு பிரிவு துணை கமிஷன–ராக பணியாற்றி வந்த ச.ஷியா–மளா தேவி பெரம்ப–லூர் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டாக நியமிக்கப்பட் டார். இதையடுத்து பெரம்ப–லூர் மாவட்ட 24-வது போலீஸ் சூப்பிரண்டாக ச.ஷியாமளா தேவி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பெரம்ப–லூர் மாவட்ட 6-வது பெண் போலீஸ் சூப்பிரண்டு என்பது குறிப் பிடத்தக்கது. பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய–தாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பங்களை தடுத்து, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக–வும் பாதுகாப்பான மாவட் டம் என்ற சூழலை உரு–வாக்குவேன். சாலை விபத் துகள், போக்குவரத்து நெரிசல் இல்லாத மாவட்ட–மாகவும் மாற்றுவேன். ரவுடிகள், சமூக விரோ–திகளை ஒடுக்கப்பட்டு பொதுமக்கள் அமைதியாக வாழும் வகையில் உறுதியான நடவடிக்கைகளை எடுப் பேன் என்றார். இதையடுத்து வாரந் தோறும் புதன்கிழ–மைக–ளில் மாவட்ட போலீஸ் சூப்பி–ரண்டு அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு மனு விசாரணை மற்றும் குறைதீர்க்கும் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்த போலீஸ் சூப்பி–ரண்டு ச.ஷியாமளா தேவி பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்கள் பெற்ற–தோடு, அவர்களிடம் குறை–களையும் கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி புகார் மனுக்கள் அளிக்க வருகை தரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி பிரச்சி–னைகளை தீர்த்து வைக்கு–மாறும், அவர்களுக்கு குடிநீர், பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களை வழங்குமாறும் போலீசா–ருக்கு அறிவுரைகள் வழங்கி–னார்.