search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில்  - கார்த்திகை தீபம் ஏற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
    X

    பெரம்பலூர் பிரம்மரிஷி மலையில் - கார்த்திகை தீபம் ஏற்றும் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

    • பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது.
    • இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் ஏற்ற பட்டு வருகிறது. இதன்படி 41-ம் ஆண்டு மகா கார்த்திகை தீபம் வரும் 26-ந்தேதி ஏற்றப்பட உள்ளது.

    இதையொட்டி எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அமைந்துள்ள அன்னை காகன்னை ஈஸ்வர் ஆலயத்தில் 2,100 மீட்டர் திரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே தீபம் ஏற்றும் 5 அடி உயரத்திலான செம்பு கொப்பரைக்கு பூஜை செய்யப்பட்டது. மாதாஜி ரோகிணி ராஜகுமார், தவயோகி தவசிநாதன் பூஜையை நடத்தினர்.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கார்த்திகை தீபம் அன்று 2,100 மீட்டர் திரி ,ஆயிரத்து 8 லிட்டர் எண்ணெய்,108 கிலோ கற்பூரம் கொண்டு தீபம் ஏற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×