என் மலர்
உள்ளூர் செய்திகள்

கீழப்பெரம்பலூரில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
- கீழப்பெரம்பலூரில் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
- பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்துள்ள கீழப்பெரம்பலூரில் கிராம பொதுமக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பழமலை தலைமை தாங்கினார். இளமுருகன், காந்தி, ரத்தின பாலா, தங்கராசு, ஜோதி, சூரசிங்கு, வெங்கடாசலம், ஆதிமூலம், சாந்தப்பன், ஆனந்தன், சுடர்மனி, பிரவீன்குமார், இளையராஜா, வேள்விமங்கலத்தை சேர்ந்த கபிலன், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழப்பெரம்பலூர் மற்றும் வேள்விமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி கட்டிடம் பழுது நீக்கம் செய்யாத ஒன்றிய கவுன்சிலரை தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
30 வருடத்திற்கு மேலாக கிடப்பில் போடப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். ஜெயக்குமார் மளிகை கடையில் இருந்து தெற்கு தோப்பு வரை தார்சாலை அமைத்திடவும், சின்னாற்றில் மேம்பாலம் அமைக்கவும் , பெண்கள் சுகாதார வளாக கட்டிடம் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லை இதனை சரிசெய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் , பருவ மழையின் காரணமாக வடக்கேரி வரத்துவாய்க்கால் தூர்வாரவும், அரசு மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் உடனே நியமனம் செய்யவும், கீழப்பெரம்பலூர் முதல் வசிஷ்டபுரம் வரை தார் சாலையின் பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைத்திடவும் , கோழியூர் பாதையில் தார் சாலை அமைத்திடவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சின்ன பையன், மண்டல துணை வட்டாட்சியர் பாக்கியராஜ், வருவாய் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேஷ் மற்றும் மனோகர் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்ததையடுத்து சிறிது நேரத்தில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.






