என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகருக்கு பட்டா கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகருக்கு பட்டா கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு](https://media.maalaimalar.com/h-upload/2025/02/07/9042317-collector.webp)
கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகருக்கு பட்டா கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பல அரசு அலுவலகங்களில் 40 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம்.
- ஏரி உள்வாய் அரசு புறம்போக்கு நிலம் என்று புறக்கணிக்கிறார்கள்.
வில்லிவாக்கம்:
கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த மாஸ்டர் வசந்தகுமார்ஜி தலைமையில் பொதுமக்கள் சென்னை மாவட்ட கலெக்டரிடம் பட்டா கேட்டு மனு கொடுத்தார்கள். அந்த மனுவில், "நாங்கள் 200 குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளாக கொளத்தூர் பாரத் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் வசித்து வருகிறோம்.
எங்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு நாங்கள் மனு அளித்த போது இந்த பகுதி ஏரி உள்வாயில் அரசு புறம்போக்கு நிலம் என்று தவிர்த்தார்கள். இதனால் நாங்கள் முதலமைச்சர் தனிப்பிரிவிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டதில் அரசாங்க ஏரி உள்வாயில் புறம்போக்கு என்று எங்களுக்கு எழுத்து மூலமாக தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.
இங்கிருக்கும் நாங்கள் அனைவரும் தளம் போட்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இதே முகவரியில் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் 1994 -ம் ஆண்டு சென்னை கொளத்தூர் சர்வே எண் 13,14, பாரத் ராஜீவ் காந்தி நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி சிறப்பு தாசில்தார் விஜயகுமார் என்பவரின் தலைமையில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த நகலை வைத்து நாங்கள் பல அரசு அலுவலகங்களில் 40 ஆண்டுகளாக 200 குடும்பங்கள் பட்டா கேட்டு விண்ணப்பித்தோம். ஆனால் ஏரி உள்வாய் அரசு புறம்போக்கு நிலம் என்று புறக்கணிக்கிறார்கள். எனவே தாங்கள் எங்களுக்கு பட்டா வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.