search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெட்ரோலிய கழிவுநீரானதுகிணறுகளில் கலப்பதால் சுகாதார சீர்கேடு
    X

     கிணற்று நீரில் பெட்ரோலிய கழிவுகள் கலந்திருப்பதால் பச்சை செடி, கொடிகள் தீ பற்றி எரிவதை படத்தில் காணலாம்.

    பெட்ரோலிய கழிவுநீரானதுகிணறுகளில் கலப்பதால் சுகாதார சீர்கேடு

    • ெபட்ரோலிய நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்தி்ற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விட்டு சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவி்க்கின்றனர்.
    • பெட்ரோலிய கழிவுநீர் செல்லும் கால்வாயில் எதாவது ஒரு வகையில் தீ விபத்து ஏற்ப்பட்டால் பேராபத்து காத்திருக்கிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், சிவாடி கிராமத்தில் பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு உள்ளது. நான்கு நாட்களுக்கு முன்னர் இப்பகுதியில் மழை பெய்தது, மழை நீரோடு சேர்ந்து பெட்ரோலிய சேமிப்பு கிடங்கிலிருந்நு வெளியேறிய பெட்ரோலிய கழிவுநீரானது அருகேவுள்ள ஊத்துப் பள்ளம் கிராமத் திலுள்ள விளை நிலங்கள், விவசாய கிணறுகளில் புகுந்திருக்கிறது. இதனால் கிணறுகளிலிருந்த மீன்கள் செத்து மிதந்து வருவதாகவும், விளை பயிர்கள் கருகி அழிந்து வருவதோடு சுற்றுவட்டார பகுதி முழுவதும் பெட்ரோலிய வாடை வீசி வருவதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கிணற்றிலிருந்து நிரம்பி கால்வாயில் வழிந்தோடும் தண்ணீருக்கு அருகே பற்ற வைத்த தீக்குச்சியை கொண்டு செல்லும் போது, பச்சையான செடி கொடிகளே தீப்பற்றி எரிவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு கிணற்று நீரில் பெட்ரோலிய கழிவுகள் கலந்திருப்பது உறுதியாகிறது.

    கிணறுகளிலும், விளைநிலங்களிலும் பெட்ரோலிய கழிவு நீர் புகுந்திருப்பது தொடர்பாக சம்மந்தபட்ட அரசுத்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, வருவாய்த்துறை அதிகாரிகள், அந்த ெபட்ரோலிய நிறுவன ஊழியர்கள் சம்பவ இடத்தி்ற்கு நேரில் சென்று ஆய்வு செய்து விட்டு சென்றிருப்பதாக விவசாயிகள் தெரிவி்க்கின்றனர்.

    பெட்ரோலிய சேமிப்பு கிடங்கு உள்ள இடத்திற்கும் கழிவு நீர் வழிந்தோடும் இடத்திற்கும் நடுவே சேலம்-பெங்களூருவை இணைக்கும் ெரயில்பாதை அமைந்திருக்கிறது. தினசரி இந்த வழியாக ெரயில்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றன. பெட்ரோலிய கழிவுநீர் செல்லும் கால்வாயில் எதாவது ஒரு வகையில் தீ விபத்து ஏற்ப்பட்டால் பேராபத்து காத்திருக்கிறது. இதனை சரி செய்ய தருமபுரி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

    Next Story
    ×