search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் கலெக்டர் அலுவலக சோதனையில் சிக்கிய பொருட்களால் போலீசார் அதிர்ச்சி
    X

    போலீசார் சோதனையில் சிக்கிய பொருட்கள். 

    திருப்பூர் கலெக்டர் அலுவலக சோதனையில் சிக்கிய பொருட்களால் போலீசார் அதிர்ச்சி

    • பொதுமக்கள் தற்கொலை முயற்சிக்காக பெட்ரோல், மண்எண்ணை உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருகின்றனர்.
    • பொருட்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திங்கட்கிழமை தோறும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களது தீர்க்கப்படாத குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து தீர்வு பெற்று வருகின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்கள் தற்கொலை முயற்சிக்காக பெட்ரோல், மண்எண்ணை உள்ளிட்ட பொருட்களை கொண்டு வருகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில் கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் சோதனை செய்த பின்பே அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கொண்டு வந்த உடைமைகளை சோதனை செய்ததில், பல வித்தியாசமான பொருட்களை மாநகரப் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    சோதனை செய்ததில்கட்டிங் ப்ளேயர்,பேனா கத்தி, ஸ்குரூ ட்ரைவர், கட்டுக்கம்பி,லைட்டர்,பீடி,பிசிறு வெட்டும் ட்ரிம்மர்,ஸ்பேனர் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர். இந்த பொருட்கள் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை எதற்காக கொண்டு வருகின்றனர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வாரந்தோறும் இவ்வாறு வித்தியாசமான பொருட்களை போலீசார் கைப்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×