என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 மாணவி கர்ப்பம்: விசாரணையின்போது தப்பி ஓடிய போலீஸ்காரர் கைது
- விசாரணையின்போது தப்பி ஓடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
- போலீஸ்காரர் பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாம்ளா தேவி உத்தரவிட்டு உள்ளார்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார்.
பிரபாகரன் மீது தலைவாசல் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியின் பெற்றோர் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தனர்.
அதில் எங்களது மகள் தலைவாசல் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் என்பவர் எங்களது மகளிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததில் எங்கள் மகள் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
எங்களுடைய மகளுக்கு 17 வயதே ஆகிறது. எனவே எங்கள் மகளின் கர்ப்பத்துக்கு காரணமான போலீஸ்காரர் பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த புகார் குறித்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் மாணவியை கர்ப்பமாக்கிய பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்து போலீஸ்காரர் பிரபாகரனை அழைத்து வர 2 ஆண் போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் பிரபாகரனை கைது செய்து ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர்படுத்தினர்.
தொடர்ந்து போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை சேலம் போக்சோ நீதிமன்றத்துக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
அப்போது விசாரணையின் இடையே போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பித்து வெளியே வந்த அவர் அங்கிருந்த தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்று விட்டார்.
விசாரணையின்போது தப்பி ஓடிய போலீஸ்காரர் பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே போலீஸ்காரர் பிரபாகரனை பணி இடைநீக்கம் செய்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சியாம்ளா தேவி உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் போலீஸ்காரர் பிரபாகரன், கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்