என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பயங்கர ஆயுதங்களுடன் நாமக்கல் கூலிப்படை தலைவன் கைது- மடக்கிப்பிடித்த போலீசார்
- காசி மீது 3 கொலை, கொள்ளை, வழிப்பறி கட்டப்பஞ்சாயத்து என 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து காசியை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் சிறையில் அடைத்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் தாலுகா போலீசார் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் நேற்று ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது ஆலங்குப்பம் பகுதியில் இருந்து ஒரு கார் வேகமாக வந்தது. காரை நிறுத்தும்படி போலீசார் கையசைத்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சினிமா பாணியில் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.
காரில் சோதனை செய்தபோது அதில் வீச்சருவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. காரில் இருந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் நாமக்கல் பகுதியில் சேர்ந்த காசி (வயது 33) என தெரிய வந்தது. இவர் மீது நாமக்கல் டவுன் மற்றும் தாலுகா போலீஸ் நிலையங்களில் 3 கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து என 14 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
காசியை கைது செய்த போலீசார் இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் காசியை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆம்பூர் அடுத்த பெரிய குப்பம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மூலம் ராஜா என்பவரின் வீட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். வெங்கடேசன் சகோதரி உணவு சமைத்து கொடுத்து வந்துள்ளார்.
அடிக்கடி நாமக்கல் செல்லும் காசி அங்கு குற்ற செயல்களில் ஈடுபட்டு விட்டு பெரியாங்குப்பத்தில் தங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காசியை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் சிறையில் அடைத்தனர்.
பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படை தலைவன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்