search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா
    X

    மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

    • கடந்த 3-ந் தேதி முளைப்பாரி கும்மி பாட்டு ஊர்வலத்துடன் சிறப்பு அபிஷேக பூஜை, அன்னதானம், நடைபெற்றது.
    • சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடனை நிறைவு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் அய்யாபுரம் கிராமத்தில் உள்ள இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 30-வது ஆண்டு திருவிழாவினை முன்னிட்டு செப்டம்பர் 25-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய திருவிழா கடந்த 3-ந் தேதி (செவ்வாய்கிழமை) முளைப்பாரி கும்மி பாட்டு ஊர்வலத்துடன் சிறப்பு அபிஷேக பூஜை, அன்னதானம், வில்லிசை கச்சேரி, பலவகை மேளதாளங்கள் முழங்க விமர்சையாக நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×