search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழாய் உடைப்பு காரணமாக சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
    X

    கோப்பு படம்.

    குழாய் உடைப்பு காரணமாக சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

    • ஓராண்டுக்கு மேலாகியும் குழாய் உடைப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை
    • இதன் காரணமாக சுருளியாறு மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஹைவேவிஸ், மணலாறு நீர் தேக்கங்களில் தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு இரவங்கலாறு நீர் தேக்கத்தை அடைகிறது. அங்கிருந்து தூவானம் பகுதியில் உள்ள மதகு மூலம் மின் உற்பத்தி நிலையத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    பின்னர் மலைப்பள்ளம் வழியாக 2 கி.மீ தூரம் 22 ஆங்கர் தூண்கள் அமைத்து பென்ஸ்டாக் எனப்படும் ராட்சத இரும்பு குழாய்கள் மூலம் சுருளியாறு மின் நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இந்த மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் மூலம் 35 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு தேனி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் கயத்தாறு மின் வட்டப்பகுதி மின் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். முழுக்க முழுக்க உள்ளூர் தேவைக்கே இந்த மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி 12 வது ஆங்கர் தூண் மேலே உள்ள பென்ஸ்டாக் குழாயில் 20 மீட்டர் அளவில் வெடிப்பு ஏற்பட்டது.இதனால் தண்ணீர் வீணாக வெளியே சென்றது.

    இதன் காரணமாக மின் நிலையத்துக்கு தண்ணீர் வரத்து நின்றதுடன் மின் உற்பத்தியும் நிறுத்தப்பட்டது. ஓராண்டுக்கு மேலாகியும் குழாய் உடைப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை. இதனால் மின் வாரியத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும், பொதுமக்களுக்கு மின் தேவையும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

    தற்போது தொடர் மழை காரணமாக தூவானம் அணை நிரம்பியுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள தண்ணீர் வேறு வழியின்றி சுருளி அருவிக்கு திருப்பி விடப்படுகிறது. இதனால் மழை நின்ற பிறகும் சுருளி அருவி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படு கிறது. சுருளி அருவியை நம்பியுள்ள 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து ள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பென்ஸ்டாக் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×