என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆண்டிபட்டியில் 18 நாட்களாக நடைபெற்ற விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
- விசைத்தறி ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
- பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் சக்கம்பட்டி பகுதியில் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 18 நாட்க ளாக வேலைநிறுத்த போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை திண்டுக்கல் தொழி லாளர் நல அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காட்டன் மற்றும் பாலிஸ்டர் சேலை விசைத்தறி கூடங்க ளில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு 14 சதவீதமும், வீட்டில் விசை த்தறியில் உற்பத்தி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு 10 சதவீதமும் சம்பள உயர்வு கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
இருதரப்பு இடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து தொழிற்சங்கத்தினர் மற்றும் நெசவாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். எனவே இன்றுமுதல் வழக்கம்போல் விசைத்தறி கூடங்கள் இயங்கும் என எதிர்பார்க்க ப்படுகிறது.