search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் பூக்கள் விலை உயர்வு
    X

    தருமபுரியில் பூக்கள் விலை உயர்வு

    • ஆடி மாதத்தின் தொடர் விழாக்களால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
    • சம்பங்கி கிலோ 140 ரூபாய், நந்தியாவட்டம் கிலோ 80 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    தருமபுரி,

    ஆடி மாதம் சக்தியாகி களும் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் தமிழர்க ளின் பண்டிகைகள் ஆடியில் தொடங்குகிறது.

    இந்த மாதத்தில் வரும் ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்படுவதால். இந்த நாட்களில் தமிழர்கள் குலதெய்வ வழிபாடு மற்றும் மாரியம்மன் வழிபாடு, காது குத்து உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பூக்களின் தேவையும் அதிகரித்துள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆனி மாதத்தில் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது ஆடி மாதத்தின் தொடர் விழாக்களால் பூக்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது.

    இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் பூ மார்க்கெட்டில் குண்டுமல்லி கிலோ 360 ரூபாய், சன்னமல்லி கிலோ 220 ரூபாய், கனகா மரம் கிலோ 400 ரூபாய், காக்டா கிலோ 260 ரூபாய், ஜாதி மல்லி கிலோ 240 ரூபாய், மூக்குத்தி கிலோ 160 ரூபாய், அரளி கிலோ 120 ரூபாய், சம்பங்கி கிலோ 140 ரூபாய், நந்தியாவட்டம் கிலோ 80 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

    மேலும் நாளை வரும் ஆடி பவுர்ணமி மற்றும் ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, முக்கிய நாட்களில் பூக்களின் விலை கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×