search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- சான்றிதழ்கள்
    X

    மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் வழங்கினார்கள்.

    மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு- சான்றிதழ்கள்

    • மாரத்தான் போட்டி பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.
    • அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    விழுப்புரம், மே.2-

    விவிழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது மஞ்சப்ைப அவசியம்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை சார்பில் மாவட்ட அளவி லான மினி மாரத்தான் போட்டி விழுப்புரத்தில் நடை பெற்றது. இப்போட்டி யை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டிகள், பள்ளி- கல்லூரி மாண வர்கள், பள்ளி- கல்லூரி மாணவிகள், பொதுப்பிரி வினர், திருநங்கைகள் என 4 பிரிவுகளாக தனித்தனி யாக நடைபெற்றது.

    விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடல் வளாகத்தில் இருந்து தொடங்கி திருச்சி நெடுஞ்சாலை, நான்கு முனை சந்திப்பு, மாம்பழப்பட்டு சாலை, கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாக பின்புறம் உள்ள சாலை வழி யாக மாவட்ட காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் முடி வடைந்தது. இப்போட்டி யில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள், பொது மக்கள், திருநங்கை கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக ஓடி இலக்கை அடைந்தவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ஆயிரம் மற்றும் 4 முதல் 10 வரை ரூ.500 வீதம் அனைத்து பிரிவினர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப் பட்டது. இதனை அமைச் சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் வழங்கி னார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர்பழனி, டாக்டர் பொன்.கவுதமசிகா மணி எம்.பி., எம்.எல்.ஏ. க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சு மணன், உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

    Next Story
    ×