search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டப்பணிகள்
    X

    புதுக்கோட்டையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டப்பணிகள்

    • புதுக்கோட்டையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
    • ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

    புதுக்கோட்டை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்த நலத்திட்ட பணிகள் விபரம் வருமாறு:

    ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.379.30 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.81 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்), சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை என மொத்தம் ரூ.143 கோடி மதிப்பீட்டில் 1,397 திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகளின் சார்பில் முதலமைச்சர் பயனாளிகளுக்கு ரூ.379 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

    ஆகமொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாைல நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூ.603.66 கோடி மதிப்பிலான மக்கள்நலத் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    Next Story
    ×