என் மலர்
உள்ளூர் செய்திகள்

அறந்தாங்கி மார்க்கெட்டில் முத்திரையிடா 21 மின்னனு தராசுகள் பறிமுதல்
- அறந்தாங்கி மார்க்கெட்டில் முத்திரையிடா 21 மின்னனு தராசுகள் பறிமுதல் செய்தனர்
- தொழிலாளர்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தினசரி சந்தையில் 50க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மொத்தம் மற்றும் சில்லரை முறையில் காய்கறிகள் விற்கப்படுகின்றன. காய்கறிகளை எடை அளவீடு செய்வதற்கு எடைக்கற்கள், தராசு மற்றும் மின்னனு தராசுகள் பயன்படுதப்படுகின்றன.எடை போடும் தராசுகள் போலியானதோ, தேய்மானம் ஏற்பட்டோ, எடைகற்கள் உடைந்தோ காணப்பட்டால் நுகர்வோர் பாதிக்கக் கூடும் என்பதற்காக தொழிலாளர் துறை சார்பில் ஆண்டுக்கு ஒரு முறை எடை தராசுகள் சரிபார்க்கப்பட்டு முத்திரை பதிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தொழிலாளர் துறை உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 12 அதிகாரிகள் கொண்ட குழுவினர் தினசரி காய்கறி சந்தை மற்றும் தினசரி மீன் சந்தை ஆகிய இடங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் முத்திரையிடப்படாத 21 மின்னனு தராசுகள் மற்றும் எடை கற்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.பறிமுதல் செய்யப்பட்ட தராசுகள் மற்றும் எடை கற்கள் அறந்தாங்கி தொழிலாளர் துறை அலுவலகத்தில் வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சோதனையில் மாவட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர்கள் குணசீலன், லெட்சுமி, பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.






