search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    33 அடி உயர குதிரை சிலைக்கு 2,500 மாலை அணிவிப்பு
    X

    33 அடி உயர குதிரை சிலைக்கு 2,500 மாலை அணிவிப்பு

    • பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் நேர்த்திகடன்
    • இன்று தெப்பத் திருவிழா நடைபெறுகிறது

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது.குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவில், கோவில் முன்பு உள்ள ஆசிய அளவில் சிறப்பிடம் பெற்ற 33 அடி உயர குதிரை சிலைக்கு அதன் உரத்திலேயே பக்தர்கள் பூ மற்றும் காகித மாலைகள் அணிவித்து வழிபடுவது வழக்கம்.நடப்பாண்டு திருவிழாவையொட்டி கிராம மக்களின் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம் ஆகியவற்றை கயிறு மூலம் கட்டி குதிரை சிலைக்கு அணிவித்தனர்.தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் பூ மற்றும் காகித மலைகளை எடுத்து வந்து, கோவிலின் இருபுறச் ச ாலையிலும் பல கி.மீ. தொலைவிற்கு காத்திருந்து குதிரைக்கு மாலை அணிவித்து வழி பாடு மேற்கொண்டனர். கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. கோவிலை சுறி 50க்கும் மேற்பட்ட இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு குதிரைக்கு சுமார் 2,500க்கு மேல் மாலை பக்தர்களால் அணிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட அதிகம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இன்று மாலை தெப்ப திருவிழா நடைபெற உள்ளதை தொடர்ந்து பக்தர்கள் குதிரைக்கு மாலை அணிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×