என் மலர்
உள்ளூர் செய்திகள்
கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி
- கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- புத்தக திருவிழா நடைபெற உள்ளது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதியில் உள்ள நகர்மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வரும் 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 5-வது புத்தக திருவிழா நடைபெற உள்ளது. கலெக்டரை தலைவராக கொண்டு, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடத்தப்பட உள்ள இந்த புத்தகத் திருவிழாவில் 80 அரங்ககளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற உள்ளன.
இந்த புத்தகத் திருவிழா குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நேற்று கா லை 11.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை புத்தக வாசிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவர் மலர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். கல்லாலங்குடி தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலெட்சுமி மற்றும் ஸ்ரீ சுபபாரதி பள்ளியின் முதல்வர் விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் ஊராட்சி செயலர் ஜெனித் அரிஸ்டாட்டில், மக்கள் நலப் பணியாளர், தூய்மைப் பணியாளர்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஐயப்பன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள் ஆகிய இடங்களில் புத்த கவாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றன.