search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க அனுமதி கேட்டால் சி.பி.ஐ.க்கு கொடுக்கதான் வேண்டும்- அமைச்சர் பேட்டி
    X

    முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க அனுமதி கேட்டால் சி.பி.ஐ.க்கு கொடுக்கதான் வேண்டும்- அமைச்சர் பேட்டி

    • முன்னாள் அமைச்சர்களை விசாரிக்க அனுமதி கேட்டால் சி.பி.ஐ.க்கு கொடுக்கதான் வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
    • அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ரூ.14 லட்சம் மதிப்பில் ஊஞ்சல், சறுக்கு விளையாட்டு, நுண்ணறிவுக்கான வரைபடங்கள் உள்ளிட்டவற்றுடன் அமைக்கப்பட்ட உணர்வுகள் ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா, முழு உடற்பரிசோதனை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மையம் ஆகியவற்றை மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. முத்துராஜா, மருத்துவ கல்லூரி முதல்வர் பூவதி, நகராட்சி தலைவர் திலகவதி செந்தில், இருக்கை மருத்துவர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது :-

    முன்னாள் அமைச்சரிடம் விசாரணை நடத்த வேண்டுமென சிபிஐ அனுமதி கேட்டால் அனுமதி கொடுத்து தான் ஆக வேண்டும். இது குறிதது தமிழக முதல்வர் உரிய முடிவை எடுப்பார்.

    அதே சமயம் குட்கா விவகாரத்தில் முன்னாள் அமைச்சரை விசாரிக்க வேண்டுமென சிபிஐ அனுமதி கேட்டுள்ளதாக தகவல் மட்டும் வெளியாகி உள்ளது. இது குறித்து முழு விவரங்கள் இனிமேல் தான் அதிகாரிகளிடம் கேட்டு ஆலோசிக்க உள்ளேன்.

    தற்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. நாங்கள் எங்கெல்லாம் சோதனை நடத்தினோமோ அங்கெல்லாம் சோதனை நடத்தப்படுகிறது. நாங்கள் சோதனை நடத்தும் போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியவர்கள் வருவான வரித்துறை சோதனை குறித்து வாய் திறக்கவில்லை.

    சிறைகளில் கைதிகள் செல்போன்கள் பயன்ப டுத்த அலுவலர்கள் உடந்தையாக இருந்தால் அவர்கள் மீது பணியிடை நீக்கம், பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    Next Story
    ×