என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
- ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சித்திரவேல் தலைமை தாங்கினார்.
- வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வீட்டு மனையும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கோட்டை:
கந்தர்வகோட்டையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சித்திரவேல் தலைமை தாங்கினார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 150 நாட்கள் வேலையும் குறைந்தபட்சம் ரூபாய் 351 சம்பளம் வழங்க கோரியும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வீட்டு மனையும் வழங்கிட வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னத்துரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினவேல், வடக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.